Rekha Nair : நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் துடிதுடித்து பலி.! போலீசார் வழக்கு

First Published | Aug 28, 2024, 7:29 AM IST

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 55 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த போது காரை இயக்கியது யார், ரேகா நாயர் காரில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rekha Nair

சர்ச்சையும் ரேகா நாயரும்

இரவின் நிழல், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ரேகா நாயர், இரவின் நிழல் படத்தில் மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், இவர் சமூகவலைதளத்தில் பெண்கள் தொடர்பான பல்வேறு சர்ச்சையான கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டியவர், ஒருமுறை தன்னைப்பற்றி தவறாக பேசியதாக கூறி வாக்கிங் சென்ற நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் நடு ரோட்டில் மோதலில் ஈடுபட்டார்.  தற்போதைய திமுக எம்எல்ஏ ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

மது போதையில் சாலையில் தூக்கம்

இந்த நிலையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன்  என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மேற்கு ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள வி எம் பாலகிருஷ்ணா தெருவில் மதுபோதையில் ஒருவர் சாலை ஓரத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியது. 
 

Tap to resize

கார் ஏறி இறங்கியதில் ஒருவர் பலி

இதில் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்த கேகே நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மஞ்சள்ல ஏற்கனவே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார் ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கணவனை கொலைகாரனாக்கிய ரீல்ஸ் சம்பவம்; கர்நாடகாவில் பரபரப்பு
 

Actress rekha Nair

காரில் ரேகா நாயர் இருந்தாரா.?

அப்போது அந்த கார் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து விபத்து நடைபெற்ற போது காரை இயக்கியது யார்.? விபத்தின் போது நடிகை ரேகா நாயர் காரில் இருந்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து  கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நடிகை ரேகா நாயருக்குக சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்
 

Latest Videos

click me!