சரக்கு அடிக்குறதுல நாம என்னமோ வீக் தான்.. டாப் எந்த மாநிலம்ன்னு பாருங்க!

தனிநபர்கள் மது அருந்துவதற்காக செய்யும் செலவு அடிப்படையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எந்தெந்த மாநிலங்களில் மதுவுக்காக அதிகம் செலவு செய்யப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

Spending for alcohol

இந்தியாவில் தனிநபர்கள் மது அருந்துவதற்காக செய்யும் செலவு அடிப்படையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

Liquor in India

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2011-12ஆம் நிதி ஆண்டு தரவுகளின்படி, மதுவுக்காக தனிநபர் செய்யும் செலவு அடிப்படையில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மது குடிப்பவர்கள் சராசரியாக ரூ.620 செலவு செய்கிறார்கள்.


Individual spending for wine

கேரளாவில் இது ரூ.486 ஆக உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ரூ.457, பஞ்சாபில் ரூ.453 செலவு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சராசரியாக ரூ.330 செலவு செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.308 செலவிடுகிறார்கள்.

Liquor sales

கோவா மதுபான விற்பனை மூலம் அதிக வரி வருவாய் பெறும் மாநிலமாக உள்ளது. ஜார்க்கண்ட் இந்த வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது.

Alcohol Tax income in Indian states

தெலுங்கானா மாநிலத்தில் தனிநபர் ஒருவர் ஓர் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,623 ஐ மதுவுக்காக செலவு செய்கிறார்கள். அடுத்த இடத்தில் உள்ள ஆந்திர பிரதேசத்தில் சராசரியாக ரூ.1,306 செலவிடுகிறார்கள்.

சத்தீஸ்கர் 3வது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் தனிநபர் ஒருவர் மதுவுக்காச் செலவிடும் சராசரித் தொகை ரூ.1,277. பஞ்சாபில் இந்தத் தொகை ரூ.1,245 ஆகவும், ஒடிசாவில் ரூ.1,156 ஆகவும் உள்ளது.

Latest Videos

click me!