பொங்கலுக்கு கொட்டோ கொட்டு என கொட்டிய மதுபான விற்பனை.! ஒரே நாளில் இத்தனை கோடியா.?

Published : Jan 17, 2025, 08:24 AM IST

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு நாட்களில் பல கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது. இது தொடர்பான பட்டியில் வெளியாகியுள்ளது. 

PREV
14
பொங்கலுக்கு கொட்டோ கொட்டு என கொட்டிய மதுபான விற்பனை.! ஒரே நாளில் இத்தனை கோடியா.?
tasmac shop

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மது விற்பனை

தமிழகத்தில் மதுபான விற்பனையானது தனியாரிடம் இருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசே டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மது விற்பனை மூலம் பணமானது தமிழக அரசுக்கு கொட்டோ கொட்டு என கொட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை நடைபெறுகிறது. எப்போதும் மதுக்கடைகளின் வாசலில் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கிறது. 

24
tasmac sale

மது விற்பனை அதிகரிப்பு

மது குடித்தாலே ஒதுக்கிய நிலை மாறி மது குடிக்காதவர்களை தான் தற்போது ஒதுக்கும் நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு மது விற்பனை சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அந்த வகையில் அலுவலக மீட்டிங், நண்பர்க சந்திப்பு, இரவு நேர பார்ட்டி என எங்கு பார்த்தாலும் மதுவானது கட்டாயம் இடம்பெறுகிறது,

மேலும் மதுபானம் குடித்து விட்டு அதனையே ஸ்டைலாக போஸ்ட் போடும் காலமும் வந்துவிட்டது. இது மட்டுமில்லாமல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டு மதுபானத்தை குடித்து வருகிறார்கள். இரவு நேர பார்ட்டியில் பெரும்பாலான பெண்களின் கைகளில் மது கோப்பை காணப்படுகிறது. 

34
pongal festival liquor sales

பொங்கல் கொண்டாட்டம் - மது விற்பனை

இதன் காரணமாக மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாகவும் டாஸ்மாக் உள்ளது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 100 முதல்120 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெறுகிறது. ஆண்டிற்கு 4ஆயிரம் கோடி அளவிற்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பண்டிகை காலம் என்றால் ஒரே நாளில் 150 கோடி முதல் 200 கோடி  ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்

44
liquor sales

இரண்டு நாட்களில் இத்தனை கோடியா.?

அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி 500 கோடி ரூபாய் அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களில் 454.11 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படி , கடந்த ஜனவரி 13ம் தேதி ரூ. 185.65 கோடிக்கும், ஜனவரி 14ம் தேதி ரூ. 286.46 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில்  ரூ. 454 கோடி விற்பனையாகியுள்ளது. அதே நேரத்தில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை யொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளே அதிகளவு மது பாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டுள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories