திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பிய தமிழக பக்தர்கள்.! விபத்தில் சிக்கி 4 பேர் துடி துடித்து பலி

Published : Jan 17, 2025, 07:46 AM IST

திருப்பதியில் இருந்து திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரி மீது மோதியதில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PREV
13
திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பிய தமிழக பக்தர்கள்.! விபத்தில் சிக்கி 4 பேர் துடி துடித்து பலி

திருப்பதி கோயில் - பக்தர்கள் வருகை

திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் வரும் என கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல பலரது வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். அந்த வகையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 60ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.  இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் கூட்டமாக திருப்பதி கோயிலுக்கு மக்கள் சென்று வருகிறார்கள்.

23
Tirupati

திருச்சியில் இருந்து திருப்பதி பயணம்

அந்த வகையில் திருச்சியில் இருந்து திருப்பதி சென்று பக்தர்கள் பேருந்து விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதி தரிசனத்திற்காக நேற்று முன் தினம் தனியார் பேருந்தில் சுற்றுலாவாக வந்தனர். நேற்று இரவு தரிசனம் முடித்துக்கொண்டு சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட டிப்பர் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

33

விபத்தில் 4 தமிழர்கள் பலி

இதில் அந்த பேருந்து கவிழ்ந்ததில் 4 தமிழக பக்தர்கள் துடி துடித்து உயிரிழந்தனர். மேலும்  6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 25 பேருக்கு காயத்தோடு திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த கோர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories