gayathri raghuram
சினிமா டூ அரசியல்
தமிழ் திரைப்படங்களில் நடிகையாக கலக்கியவர் காயத்ரி ரகுராம். அரசியல் மீதான ஆர்வம் காரணமாக பாஜகவில் இணைந்து கட்சி பணியை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் பாஜக மாநில தலைவராக வந்த அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமிற்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சி பதவியில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிட்டு வந்தார். மேலும் கட்சியில் இருந்து நீக்கவும் செய்யப்பட்டார். இதனையடுத்து அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராமிற்கு மகளிர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
gayathri raghuram
அதிமுகவில் காயத்ரி ரகுராம்
இதனைடுத்து கட்சி போரட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் அண்ணா பல்கலைகழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அதிமுக மகளிர் அணிச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராமும் பங்கேற்றார். அப்போது மேடையில் மகளிர் அணி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மேடையில் இருந்து இறங்கி அவசர அவசரமாக வெளியேறி சென்றார்.
EPS and Gayathri raghuram
மேடையில் இருந்து இறங்கிய காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராமிற்க்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லையென தகவல் பரவியது. ஆனால் இது தொடர்பாக விளக்கம் அளித்த காயத்ரி ரகுராம் உட்கட்சி பிரச்சனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்தார். மேலும் மேடையில் மகளிர் அணி நிர்வாகிகள் பயன்படுத்திய வார்த்தைகள் தனக்கு பிடிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் என அதிமுக லெட்டர் பேடில் அறிக்கை ஒன்றை பாஜகவினர் பரபரப்பி வருகிறார்கள். அந்த அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதில் உள்ளது.
ADMK
அதிமுகவில் இருந்து நீக்கமா.?
இது தொடர்பாக அந்த பதிவை டேக் செய்து காயத்ரி ரகுராம் வெளியிட்ட பதிவில், அண்ணாமலை வார்ரூமிடம் அழ செய்தாய். அய்யா எடப்பாடியார் கடிதத் தலைப்பை தவறாகப் பயன்படுத்தி உங்களுக்காக அவர்கள் ஆபாசம் குற்றம் செய்ய தொடங்கினர். இது உங்கள் ஆலோசனையுடன், வழிகாட்டுதலின் படியா? இது குற்றம் என்று அவர்களுக்குத் தெரியாதா? உன் வீரம் என்னை நோக்கி மட்டுமே, திமுகவுடன் இல்லை. புல் தடுக்கி பயில்வான் செயல். என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நீ விரும்புகிறீர்கள். அது நடக்காது. உங்கள் வார்ரூம் ஜோக்கர்களுக்காக உங்களுக்கு நீங்களே சவுக்கடி கொடுக்க வேண்டும்,
GAYATHRI RAGURAM
காயத்ரி ரகுராம் ஆவேசம்
நான் அதை தலைகீழாக செய்வேன், நான் ஜோக்கர்களுக்கு பயப்படவில்லை என்று சொல்லுங்கள். உங்கள் சில்லறை யோசனையால் எந்த பயனும் இல்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக லெட்டர் பேடில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியான அறிக்கை போலியானது என தெரியவந்துள்ளது. அதிமுக தலைமையில் இருந்து அப்படி எந்த அறிக்கையில் வெளியிடவில்லையென கூறப்படுகிறது.