Madurai Jallikattu
இதுகுறித்து மாடுபிடி வீரர் தமிழரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த மாடுபிடி வீரராக இருந்தவன். முதல்நாள் இரவு 2 மணியளவில் தான் எனக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. ஒரு சிலருக்கு விரைவாக டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு டோக்கன் அளிக்கவே தாமதமாகியது. ஜல்லிக்கட்டில் மீண்டும் சாதி பார்க்க தொடங்கிவிட்டார்கள். இதனை கேட்க சென்ற என்னை தாக்கியதாக கூறினார். கருப்பாயூரணி கார்த்தி போன்றவர்கள் நேரடியாக எந்த வரிசையிலும் நிற்காமல் டோக்கன் வாங்கி சென்றதாக கண்ணீர் மல்க ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை கொடுக்கும் தமிழக அரசு! எப்படி தெரியுமா?
Director PA Ranjith
இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தரப்பில் அமைச்சர் மூர்த்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் தளத்தில்: இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
Minister Moorthy
அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை. களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ??? என கேள்வி எழுப்பியுள்ளார்.