school student
மாணவர்களும் கல்வியும்
தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு மட்டுமல்ல விளையாட்டு போட்டியிலும் மாணவர்கள் பங்கெடுக்கும் வகையில் வட்டார, மாவட்ட, மாநில அளிவிலான போட்டியை நடத்தி வருகிறது. அந்த வகையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) இணைந்து நடத்தும் 68 வது தேசிய அளவிலான 17-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
sports meet
மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
இந்த போட்டியானது இன்று முதல் வருகிற 19ஆம் தேதி வரை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி செம்மஞ்சேரியில் நடைபெறுகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளி மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகள் குறுவட்டப் போட்டிகள் முதல் தேசிய அளவிலான போட்டிகள் வரை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ 12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தேசிய அளவிலான போட்டி
2024-2025 ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) 46 வகையான விளையாட்டுப் போட்டிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இவ்விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் தமிழ்நாடு அணிகள் பங்குபெற்றுவருகின்றனர்
போட்டியின் விவரம்:
68 வது தேசிய அளவிலான (SGFI) 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு கூடைப்பந்து (BASKETBALL) விளையாட்டுப் போட்டிகள்
பங்குபெறுபவர் விவரம்:
அணிகளின் எண்ணிக்கை -33
மாணவியர்களின் எண்ணிக்கை 396
அணி மேலாளர்கள், பயிற்றுநர்கள் எண்ணிக்கை 99
நடுவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை. 150
என பங்கேற்பவர்களின் மொத்த எண்ணிக்கை- 645
வெற்றிக்கோப்பை விவரம்
முதலிடம்பெறும் அணிக்கு வெற்றிக்கோப்பையும். 12 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களும்
இரண்டாமிடம் பெறும் அணிக்கு வெற்றிக்கோப்பையும், 12 மாணவிகளுக்கு வெள்ளிப்பதக்கங்களும்,
மூன்றாமிடம்பெறும் அணிக்கு வெற்றிக்கோப்பையும் 12 மாணவிகளுக்கு வெண்கலப்பதக்கங்களும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.