தொடர் விடுமுறை: மதுரை-சென்னை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்; எந்த தேதி? முழு விவரம்!

First Published | Jan 16, 2025, 3:32 PM IST

தொடர் விடுமுறையையொட்டி மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இருந்தும் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

Pongal Holiday

சிறப்பு ரயில்கள் இயக்கம் 

சென்னையில் இருந்து பல லட்சக்கணக்கான தென்மாவட்ட மக்கள் பொங்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரை, நெல்லை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். பொங்கலையொட்டி வரும் 19ம் தேதி வரை தொடர் விடுமுறை உள்ளது. இந்த விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தென்மாவட்டங்களில் இருந்து தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.

அந்த வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது வரும் 18ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அதே நாளில் இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடையும்.

MEMU Train

மதுரை-சென்னை

மறுமார்க்கமாக மதுரையில் இருந்து வரும் 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணிக்கு இருந்து புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்  மறுநாள் அதிகாலை 00.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர்,விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர்,  செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Tap to resize

Thoothukudi-Tambaram Train

தூத்துக்குடி-தாம்பரம்

இதேபோல் தூத்துக்குடி-தாம்பரம் இடையே வரும் 19ம் தேதி அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதாவது தூத்துக்குடியில் 19ம் தேதி மாலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல்,மணப்பாறை, திருச்சி,  ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

முன்பதிவு கொண்ட இந்த ரயிலில் 7 மூன்றாம் அடுக்கு ஏசி பெட்டிகள், 4 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள், 1 முன்பதிவில்லாத பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். 

Ramanathapuram-Tambaram Train

ராமநாதபுரம்-தாம்பரம்

மேலும் ராமநாதபுரம்-தாம்பரம் இடையேயும் வரும் 19ம் தேதி அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை காலை 3.30 மணிக்கு சென்னை சென்றடையும்.

இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கள்ளல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுகோட்டை, அதிராமபட்டிணம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் 9 மூன்றாம் அடுக்கு ஏசி பெட்டிகள், 1 ஏசி எக்காமினிக் பெட்டி, 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள், 1 முன்பதிவில்லாத பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். 

அரசியலில் களம் இறங்கும் இன்பநிதி.? அடுத்த வாரிசை அறிமுகம் செய்ய திட்டமிடும் திமுக தலைமை

Latest Videos

click me!