காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்ற வாக்குறுதி நிறைவேறவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி, செவிலியர்கள், நூலகர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளின் சிறப்பு ஊதியமும் மதிப்பூதியமும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல அரசாணைகள் இன்னும் திரும்ப பெறப்படவில்லை. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஓய்வூதியத்திற்காக 10% பிடித்தம் செய்யப்பட்டதையும், அதிமுக–திமுக மாறி மாறி ஆட்சி செய்த 23 ஆண்டுகளிலும் அந்த தொகை திருப்பி வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். பிடித்தம் செய்யப்பட்ட 84,000 கோடி ரூ.42,000 கோடி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட வேண்டும். மீதமுள்ள 42,000 கோடி எல்ஐசி கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.