இனி வீடு கட்ட புது ரூல்ஸ்.! பார்க்கிங் கட்டாயம்- கட்டட விதிகள் திருத்தி அறிவிப்பு

Published : Oct 17, 2025, 10:50 AM IST

New parking rules for houses : தனி வீடுகளுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3,300 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு கார்கள் மற்றும் பைக்குகளுக்கும், அதற்கு மேற்பட்ட பரப்பளவுள்ள வீடுகளுக்கு  இடம் ஒதுக்க புதிய விதிமுறைகள்

PREV
14

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவு, அந்த வகையில் ஒரு சிறிய இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவே சிறுக சிறுக சேர்த்து வீடு கட்டுவார்கள். ஆனால் வீட்டில் உள்ள வாகனங்களுக்கு என இடம் ஒதுக்கீடு செய்யாமல் சாலைகளில் நிறுத்துவார்கள். இதனால் பெரும்பாலான சாலைகளில் கார்கள், பைக்குகள் அணிவகுத்து நிற்கின்றன. 

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வீடு கட்டும் போது கட்டாயம் பார்க்கிங் வசதி மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

24

தமிழகத்தில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில், இரண்டு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவதை கட்டாயமாக்கும் வகையில், பொது கட்டட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், 

நிறுவன கட்டடங்கள் போன்றவற்றுக்கு, வாகன நிறுத்துமிட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.ஆனால், இந்த விதிகள் தனி வீடுகளுக்கு பொருந்துமா என்பதில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. தனி வீடுகள், அப்பார்ட்மெண்ட் போன்றவற்றிலும் எவ்வளவு இடத்தில் பார்க்கில் அமைக்க வேண்டும் என சந்தேகம் இருந்து வந்தது.

34

இதனையடுத்து தனி வீடு களுக்கு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக விதிகள் வகுக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அரசாணையில், பொது கட்டட விதிகளில் தனி வீடுகளுக்கான வாகன நிறுத்துமிடம் தொடர்பாக, சில பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.இதன்படி, 3,300 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள தனி வீடுகளில், இரண்டு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடத்தை ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44

இதேபோன்று, 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள வீடுகளில், 4 கார் நிறுத்துமிடம், 4 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும் எனவும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில், இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories