சாதி மறுப்பு திருமணம்! மகளின் தாலியை அறுக்க காரணமாக இருந்த தந்தை! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Published : Oct 17, 2025, 10:16 AM IST

திண்டுக்கல்லில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பால் தொழிலாளி ராமச்சந்திரன் என்பவரை அவரது மாமனார் சந்திரன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதை மாமியார் கைது.

PREV
15
காதல் திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(24). பால் கறக்கும் தொழிலாளி. இவர் கணபதிபட்டி கிராமத்தில் வசித்து வரும் சந்திரன் (49) மகள் ஆர்த்தி (21) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ராமச்சந்திரன் மீது பெண்ணின் தந்தை சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

25
ஆணவக்கொலை

இந்நிலையில் வழக்கம்போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறந்து விட்டு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நிலக்கோட்டை அருகே கூட்டாத்து அய்யம்பாளையம் பாலத்தில் சென்ற போது அவரை வழிமறித்த மாமனார் சந்திரன் தகராறில் ஈடுபட்டார். அப்போது சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

35
மாமனார் கைது

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரன் கௌரவ கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் மருமகனை கொலை செய்த மாமனார் சந்திரனை கைது செய்தனர்.

45
ராமச்சந்திரனின் மனைவி போராட்டம்

இந்நிலையில், மாமனார் சந்திரன் ஒருவரால் மட்டும் ராமச்சந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்க முடியாது? இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? எனவே, உண்மை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, அவரது உடலை பெற்று அடக்கம் செய்தனர்.

55
மாமியார், மைத்துனர் கைது

ராமச்சந்திரன் மனைவி ஆர்த்தி போராட்டம் எதிரொலியா தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ராமச்சந்திரனை கொலை செய்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த சந்திரன் என்பவரது மனைவி அன்புச்செல்வி (39) அவர்களது மகன் ரிவின் (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories