தமிழகத்தில், தொழில் உரிமம் வசூலிக்க, அந்தந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், துணை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் உரிம வழங்குவது தொடர்பாக விதிகளை உருவாக்கி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் டீக்கடைகள், உணவகங்கள், தங்கும் இடங்கள், திருமண மண்டபங்கள், சிறு அரங்குகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் குடோன்கள், தனியார் நிறுத்தங்கள் மற்றும் தனியார் இறைச்சி கூடங்கள் என்று தனித் தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.