தமிழக அரசு, பௌத்தர்கள் நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்குச் சென்று திரும்ப 150 பேருக்கு ரூ.5,000 மானியம் வழங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30, 2025.
தமிழ்நாடு அரசு வழங்கும் புனித பயணத்திற்கு பல்வேறு நிதி உதவி திட்டம் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதங்களுக்குரிய புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உதவுவதற்காக இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 120 பேருக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.
ஒரு நபருக்கு ரூ.10,000/- மானியமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர், மற்றும் 20 சீக்கிய மதத்தினர் ஆகிய 120 பேருக்கு ஆண்டுக்கு ரூ.12 இலட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
24
பௌத்தர்கள் புனித யாத்திரை
இந்த நிலையில் தற்போது பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்குச் சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ. 5,000 வரை மானியம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
34
யார் விண்ணப்பிக்கலாம்?
யார் விண்ணப்பிக்கலாம்?
பௌத்த மக்கள் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம் எங்கே கிடைக்கும்?
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ளலாம். (அ) www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
ஆணையர்,சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005. எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அந்த அறிவிப்பில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.