அடி தூள்.! குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய்.! குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

Published : Jul 28, 2025, 12:21 PM ISTUpdated : Jul 28, 2025, 12:22 PM IST

மத்திய, மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நிதி உதவி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.இந்த நிலையில் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என 

PREV
14
பெண்களுக்கான திட்டங்கள்

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற நிதி உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் முதல் 1 கோடியே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

24
மகளிர் உரிமை தொகை திட்டம்

இந்த திட்டத்தில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து தற்போது தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த மனு மீதான பரிசீலனை 45 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதே போல பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டமானது புதுச்சேரியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

34
புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை

புதுச்சேரி அரசு பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை 2024-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவிடும் நோக்கத்தில் குறிப்பாக குடும்பத் தலைவிகள், விதவைகள், மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

அரசின் எந்த உதவித் தொகையும் பெறாத 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

44
அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்

இந்த நிலையில் புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் அறித்தது போல புதுச்சேரியில் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் வழங்கப்படும் நிலையில், அனைவருக்கும் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories