ஏண்டா! எங்க அப்பா எஸ்.ஐ.யாக இருந்தும் என் தங்கச்சியே லவ் பண்ணுவியா! பட்டப்பகலில் சென்னை ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை!

Published : Jul 28, 2025, 11:55 AM IST

தூத்துக்குடியில் ஐடி ஊழியர் கவின்குமார், காதல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித் என்ற நபர் சரணடைந்து, தனது சகோதரிக்கு காதல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

PREV
15

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின்குமார் (28). பட்டியலினத்தை சேர்ந்த இவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வார விடுமுறையன்று சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது வயதான தாத்தாவை அழைத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக பாளை கேடிசி நகர் முதலாவது தெருவிலுள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து தாத்தாவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

25

அப்போது திடீரென அங்கு வந்த இரண்டு பேர் கவின்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

35

இதுதொடர்பாக சுர்ஜித் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்ததால் கவினை செய்ததாக தெரிவித்தார். சுர்ஜித்தின் தந்தை சரவணன் மணிமுத்தாறு பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் தாயார் கிருஷ்ணகுமாரி ராஜபாளையம் பட்டாலியன் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். எனது சகோதரி தூத்துக்குடியில் படித்தபோது கவின்குமாரும் அதே பள்ளியில் படித்தார். அப்போது அவர் எங்களுடன் நட்பாக பழகினார். அந்த பழக்கம் பள்ளி முடிந்து கல்லூரிக்குச் சென்ற பின்னரும் தொடர்ந்தது. அந்த நட்பே இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

45

எனது சகோதரி சித்த மருத்துவராக உள்ளதால் உறவினர்களுக்கு வைத்தியம் பார்ப்பது போன்று அந்த மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து அவரை சந்தித்து வந்தார். இருவரையும் எச்சரித்தும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சந்தித்து வந்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று கவின் குமார் தனது தாத்தாவுடன் சித்த மருத்துவமனைக்கு வந்த நிலையில் கொலை செய்ததாக தெரிவித்தார்.

55

இதனிடையே பெற்றோரே மகனை தூண்டி விட்டு இளைஞரை கொலை செய்ய வைத்ததாக உயிரிழந்த கவினின் தாய் செல்வி பாளைங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கைதான சுர்ஜித்தின் பெற்றோர் SI சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கவின்குமார் ஆணவப் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories