எடப்பாடி பழனிசாமி உசுப்பேற்றி செங்கோட்டையன் போன்றவர்களை வீழ்த்தி இந்த இயக்கத்தின் ஒற்றுமையை தடுத்து வலிமையை சிதைத்து கொண்டு இருக்கிறது அந்த நரி என கே.சி.பழனிசாமி அதிமுக மூத்த தலைவர் ஒருவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அதிமுகவில் ஒரு சாதி வெறி பிடித்த நரி அம்மா காலத்தில் "சாதி வெறியன்" என்று முத்திரை குத்தப்பட்டு அமைச்சரவை மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டது. அந்த நரி அம்மா இருக்கிற வரை அட்ரஸ் இல்லாமல் இருந்தது, அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு OPSஐ முதலமைச்சராக்குகிறேன், கட்சித் தலைவர் ஆக்குகிறேன் என்றெல்லாம் சொல்லி சதி திட்டம் தீட்டி OPSஐ முன்னிறுத்தி முதல் பிளவை உருவாக்கியது, அதில் தன்னை இரண்டாம் இடத்திற்கு உயர்த்திக் கொண்டது.