ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் சொன்ன முக்கிய தகவல்!

Published : May 20, 2025, 02:28 PM IST

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் இதுவரை எவ்விதமான மின்கட்டண உயர்வு தொடர்பான ஆணையும் வெளியிடப்படவில்லை.

PREV
14
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

24
மின் கட்டணம் உயர்வு?

அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு ராமதாஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என தெ

34
மின் கட்டண உயர்வும் இல்லை

இந்நிலையில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என அமைச்சர் சிவங்கர் தெரிவித்துள்ளார்.

44
மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்

இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும், எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories