மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் திய பயனாளிகளுக்கு டிசம்பர் 15ம் தேதி தேதியிலிருந்து மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
25
மகளிர் உரிமை தொகை
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மகளிர் உரிமை தொகை பெறமுடியாத மகளிர்கள் திமுக அரசின் மீது கோவத்தில் இருந்து வந்தனர்.
35
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது?
இதனையடுத்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை அக்கவுண்டில் வரும் என்ற தகவலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் திருவள்ளூர் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், விடுபட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
55
இதுவரை சுமார் ரூ.26,000 வரவு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை சுமார் ரூ.30,000 கோடி மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை சுமார் ரூ.26,000 வழங்கப்பட்டுள்ளது.' இந்தசூழலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.