அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை காட்டிலும் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்து வந்தவர் செங்கோட்டையன். தமிழக சட்டமன்ற உறுப்பினராக சுமார் 9 முறை வெற்றி பெற்று அதிமுக.வில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக பொதுச்செயலாளருடன் ஏற்பட்ட மனக்கசிவால் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
24
எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கே
மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என்று கூறி வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகி என்றும் பாராமல் அவரது அனைத்து கட்சி பதவிகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.
34
அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட செங்கோட்டையன்
சொன்ன சொல் மீறமாட்டான் செங்கோட்டையன் என்ற பாணியில் அண்மையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவில் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார். இது அதிமுக தலைமைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி அறிவித்தார்.
இந்நிலையில் விஜய் தலைமையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரசாரங்களின் போது வழிநடத்தக்கூடிய அளவுக்கு அதிகாரம் பெற்ற செங்கோட்டையனுக்கு கட்சியில் என்ன பதவி வழங்கலாம் என்பது தொடர்பாக விஜய் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற 27ம் தேதி செங்கோட்டையன் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையப்போவதாக சொல்லப்படுகிறது.