தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி

Published : Mar 03, 2026, 11:09 AM IST

Double Murder: ரவுடி கும்பல் விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

PREV
15
கஞ்சா போதை கும்பல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தனர். கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் திடீரென வெறிச் செயலில் ஈடுபட்டனர். அதாவது சாலையில் எதிரே வந்தவர்களை எல்லாம் அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டினர். பின்னர் அங்குள்ள டீ கடை ஒன்றில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது டீ கடை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

25
இரட்டை கொலையால் பதற்றம்

இதனை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனை பார்த்த அந்த ரவுடி கும்பல், அவர்களை விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் மாற்றுத்திறனாளியான ஜான் (50) மற்றும் வடமாநில தொழிலாளி செங்கல் சூளை தொழிலாளி உள்ளிட்ட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

35
போதை கும்பல் குறித்து போலீஸ் விசாரணை

அதே பகுதியை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி ஆகியோரும் படுகாயமடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகும் வெறி அடங்காத கும்பல் கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்து ஒரு சிலரை வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

45
பொதுமக்கள் சாலை மறியல்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மர்ம கும்பலின் இந்த அட்டூழியத்தை கண்டித்து பெரும்பத்து பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

55
போக்குவரத்து துண்டிப்பு

கஞ்சா போதையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சாதிய மோதலால் இந்த கொடூர நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரியில் பட்டியலின தெருவுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் நாங்குநேரி - ஏர்வாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டைகள் போன்றவற்றை சாலையின் குறுக்கே போட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories