கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு தடை போடும் மத்திய அரசு..! தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக.. கொதிக்கும் முதல்வர்..

Published : Nov 19, 2025, 10:40 AM IST

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம் என முதல்வர் ஸ்டாலின் கருத்து.

PREV
14
மெட்ரோ ரயிலுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களாக அறியப்படும் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மெட்ரோ ரயில் சேவை தேவை என்றால் நகரத்தில் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால் மதுரை மற்றும் கோவையி்ல் இந்த மக்கள் தொகை இல்லாத காரணத்தால் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

24
கோவில் நகரத்திற்கு No Metro

இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

34
தமிழ்நாடு இதனை ஒருபோதும் ஏற்காது

அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

44
மெட்ரோ ரயில் நிச்சயம் கொண்டுவரப்படும்..

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories