Published : Jul 19, 2025, 10:45 AM ISTUpdated : Jul 19, 2025, 10:46 AM IST
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகனும், முன்னாள் நடிகருமான மு.க. முத்து, 77 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகனும், முன்னாள் நடிகருமான மு.க. முத்து இன்று (ஜூலை 19) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
24
கருணாநிதியின் மூத்த மகன் மரணம்
1948-ம் ஆண்டு கருணாநிதி மற்றும் அவரது முதல் மனைவி பத்மாவதி தம்பதிக்கு பிறந்த மு.க. முத்து, 1970களில் தமிழ்த் திரைப்பட உலகில் நடிகராக அறிமுகமானார். அந்தக் காலத்தில் எம்ஜிஆர் திரைத்துறையிலும் அரசியலிலும் சக்கை போடு போட்ட நேரம் ஆகும். எம்ஜிஆருக்கு எதிராக திரைப்படங்களில் தனது மூத்த மகனான மு.க முத்துவை நடிக்க வைத்தார் கருணாநிதி. பிள்ளையோ பிள்ளை, அணைய விளக்கு, சமையல்காரன், பூவிழி வாசலில் போன்ற படங்களில் நடித்தார். மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
34
மு.க. முத்து வாழ்க்கை
அப்போதைய அரசியல் சூழலில், எம்ஜிஆருக்கு எதிராக திரையில் ஒரு புதிய ‘முகத்தை’ உருவாக்கவே அவரை நடிப்புக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்ற விமர்சனங்களும் இருந்தன. இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், பிள்ளையோ பிள்ளை படத்தின் படப்பிடிப்பை தொடக்கி வைத்தது எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பின்னாளில் அவர் திரைப்படத்திலும் அரசியலிலும் பெரிதாக முன்னேறவில்லை. அவரது வாழ்க்கையில் சில தவறான பழக்கங்கள், குடும்பப் பிரச்சனைகள் காரணமாக, அவரது தந்தை கருணாநிதியுடன் இடைவெளி ஏற்பட்டது.
மு.க முத்துவின் மகள்களில் ஒருவர், தென்மொழி, CavinKare நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதன் என்பவரை திருமணம் செய்தார். அவர்களது மகன் மனு ரஞ்சித், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவை 2017-ல் திருமணம் செய்துகொண்டார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடந்தது. பின்னர் இவர்களின் மகள் தாரணி, பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் பாஸ்கரனை திருமணம் செய்துகொண்டார். மு.க. முத்துவின் மறைவிற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.