Published : Sep 24, 2024, 12:29 PM ISTUpdated : Sep 24, 2024, 01:02 PM IST
Durai Dayanidhi Discharged: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான துரை தயாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக பல மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி, இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இவரது மகன் துரை தயாநிதி, தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கியவர் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
24
Apollo Hospitals
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்த வந்த துரை தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மூளையில் சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகின.
கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி கடந்த மாதம் மார்ச் 14ம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று துரை தயாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் அவ்வப்போது பரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி இன்று காலை 10.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் குடும்பத்தினர் துரை தயாநிதியை அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய துரை தயாநிதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.கிட்டதட்ட 294 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு துரை தயாநிதி சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.