Published : Sep 24, 2024, 11:28 AM ISTUpdated : Sep 24, 2024, 11:34 AM IST
School Teacher: தமிழகத்தில் டிட்டோஜாக் அமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காததால் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
செப்டம்பர் 6ம் தேதி தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் டிட்டோஜாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே டிட்டோஜாக் சார்பில் 30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
25
Tamilnadu Government
மேலும், டிட்டோஜாக் அமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் மூன்று நாள் டி.பி.ஐ. வளாக முற்றுகைப் போராட்ட அறிவிப்பினை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மற்றும் இயக்குநர்களுடன் கடந்த ஜூலை 22, 30 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 6ம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில் டிட்டோஜாக் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதில் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசாணை 243-ஐ ரத்து செய்தல் போன்ற எதிர்பார்த்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் அறிவித்தது.
35
School Teacher
அதில் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசாணை 243-ஐ ரத்து செய்தல் போன்ற எதிர்பார்த்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 10ம் தேதி டிட்டோஜாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் பணிக்கு வராததால் சில தொடங்க பள்ளிகள் மூடப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் பல பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில பள்ளியில் மாணவர்களே பாடம் எடுத்தது தொடர்பான புகைப்படம் வைரலானது.
டிட்டோஜாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அன்றைய தினம் சுமார் 30.5% ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் இவர்களது சம்பளம் பிடிக்கப்படும் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் டிட்டோஜாக் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.