இயக்குனர் மோகன் ஜி திரைப்படங்கள்
பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி, இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்களில் பெண் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து நிலையில் தொடர்ந்து பாமக ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜியை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக குற்றச்சாட்டு
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.
திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என தெரிவித்திருந்தார்.
Mohan G
கைதுக்கான காரணம் என்ன.?
இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜியை வீடியோ பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.