ஒரே நிமிடத்தில் மொபைல் போனிலே வீட்டு வரியும் கட்டலாம், ரசீதும் டவுன்லோடு செய்யலாம்.! இதோ லேட்டஸ்ட் தகவல்

First Published Sep 24, 2024, 8:44 AM IST

தமிழக அரசின் சேவைகள் தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக பெறமுடியும். வீட்டு வரி ரசீது, சொத்து வரி செலுத்துதல் போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் வீட்டு வரி ரசீதை இப்போதே டவுன்லோடு செய்யுங்கள்.

அப்டேட் ஆகும் தொழில்நுட்பம்

நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் மின்சார கட்டணம், வங்கி வேலை, தொலைபேசி கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என பல வேலைகளுக்கு அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்தோ, அல்லது பர்மிஷன் வாங்கியோ காலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பு பணம் கட்ட வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது கைக்குள்ளே உலகம் வந்து விட்டது.

அந்த வகையில் ஒரே நிமிடத்தில் உலகத்தில் எந்த பகுதியில் இருக்கும் பொருளையும் ஆர்டர் செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல் கருவேப்பிலை முதல் விமானம் முதல் வீட்டிற்குள் இருந்து வாங்க முடியும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் மக்களுக்கு நேரம் மிச்சப்படுகிறது. அலைய வேண்டிய அவசியமும் இல்லை, லீவு எடுக்க வேண்டிய நிலையும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசாங்கத்தின் செயல்பாடுகளும் மாறி வருகிறது.
 

மொபைல் போனில் உலகம்

தமிழக அரசின் திட்டங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்திற்கோ, வட்டாச்சியர் அலுவலகத்திற்கோ அலைய வேண்டிய தேவை இல்லை. பட்டா மாறுதல், ரேஷன் கார்டு வாங்குவது, ஆன்லைன் பட்டா, வரி செலுத்துவது எல்லாம் ஆன்லைனில் மாறிவிட்டது. இந்த நிலையில் வீட்டு வரி ரசீது ஆன்லைனில் கட்டவும் முடியும், எளிதாக டவுன்லோடு செய்யவும் முடியும். எப்படி தெரியுமா,?  அரசின் சலுகைகளை பெற குடும்ப ரேஷன் அட்டை முக்கியமானது. எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயம் ரேஷன் கார்டு இருக்கும்.  வீட்டின் முகவரிக்காக ஆதாரமாக வீட்டு வரி ரசீது கேட்கப்படும். மேலும் ஒரு இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு மாறி சென்றாலோ முகவரி மாற்றத்திற்கும் வீட்டு வரி ரசீது முக்கியம். இதனை வீட்டு ஓனரிடம் கேட்டு வாங்கலாம்.
 

Latest Videos


ஒரே நிமிடத்தில் கட்டணம் செலுத்தலாம்

ஒரு சிலர் கொடுப்பார்கள். பெரும்பாலானவர்கள் கொடுக்காமல் தவிர்க்க பார்ப்பார்கள். எனவே வீட்டு முகவரி இருந்தால் போதும் எளிதாக வீட்டு வரி ரசீது இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யலாம். அதுமட்டுமில்லை சொத்து வரியும் கட்டலாம். இந்தநிலையில் வீட்டு வரி ரசீது மற்றும் வீட்டு வரி எப்படி கட்டலாம் என தற்போது பார்க்கலாம். இதனை மொபைல் போனில் இருந்தே ஒரே நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து விடலாம்.  

முதலில் இணையதளத்தில் சென்று தமிழக அரசின் இணையதள முகவரியான  vptax என டைப் செய்ய வேண்டும். https://vptax.tnrd.tn.gov.in/ அந்த பக்கம் ஓபன் ஆனதும், வரி செலுத்திய விவரங்களை பார்க்க என ஒரு காலம் இருக்கும் இதனை கிளிக் செய்த பிறகு வரி வகை என இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.

வீட்டு வரி ரசீது டவுன்லோடு ஈசி

இதனையடுத்துசொத்து வரியை ஓகே செய்ய வேண்டும். அடுத்ததாக எந்த மாவட்டம் என கேட்கும். இதில் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தை ஓகே செய்ய வேண்டும். அடுத்ததாக ஒன்றியத்தில் உங்களது யூனியன் என்ன என கேட்கும். இதனை தேர்வு செய்து பதிவிட வேண்டும் பிறகு ஊராட்சி எது என கேட்கும் அதனையும் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக  வரி விதிப்பு எண் அல்லது ரசீது எண் என கேட்டிருக்கும். அதில் நம்மிடம் இருக்கும் பழைய ரசீது எண் அல்லது வரி விதிப்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.   இதனையடுத்து ஷோ என்ற வார்த்தை கடைசியில் இருக்கும் இதனை கிளிக் செய்தால் அடுத்த நிமிடமே மொபைல் போனில் வீட்டு வரி ரசீது கிடைத்து விடும்.

காத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை

தங்களிடம் வீட்டு வரி ரசீதும் இல்லை பழைய எண்ணும் இல்லையென்றாலும், கவலைப்பட தேவையில்லை. இந்த முறையில் வீட்டு வரி ரசீதை எளிதாக டவுன்லோடு செய்ய முடியும். அதற்கு https://vptax.tnrd.tn.gov.in/ இந்த முகவரிக்கு சென்று உங்கள் நிலுவைத்தொகையை பார்க்க என காலம் இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.  அதில் வரி வகையில் சொத்து வரியை கிளிக் செய்ய வேண்டும். மாவட்டத்தின் பெயர் கேட்டிருக்கும். அதில் உங்கள் மாவட்டத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அடுத்து யூனியதை பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக கிராம பஞ்சாயத்து எது என கேட்டிருக்கும் அதில் உங்களது ஊராட்சியை பதிவு செய்ய வேண்டும்.

வீட்டு முகவரி இருந்தால் போதும்

இறுதியாக  அலைபேசி பேசி எண், கதவு எண் என கேட்டிருக்கும் அதனை பதிவு செய்தால் போதும் வீட்டின் வரி நிலுவை பாக்கி வந்துவிடும். மேலும் வரி விதிப்பு எண்ணும் கிடைத்து விடும். எனவே இந்த எண்ணை வைத்து வீட்டு வரி ரசீதை பதவிறக்கம் செய்ய முடியும். இதே போல இந்த  vptax இணையதள பக்கத்தில் வீட்டு வரியும் எளிதாக கட்ட முடியும். இதற்காக அந்த பக்கத்தில் சென்று விரைவாக வரி செலுத்த என்ற காலம் இருக்கும் அதனை கிளிக் செய்தால் போதும் வரி செலுத்த வேண்டிய பக்கம் ஓபன் ஆகும். அதில் சென்று பே டாக்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Property tax increase

சொத்து வரியும் கட்டலாம்

பெயர், தொலைபேசி எண், மாவட்டம், வரி வகை என்ற காலத்தில் சொத்து வரி என நிரப்ப வேண்டும். அடுத்ததாக வரி விதிப்பு எண்ணை பதிவு செய்த பிறகு எவ்வளவு கட்டணம் என காட்டும் இதனை பார்த்த பிறகு அடுத்த நிமிடமே சொத்து வரி கட்ட முடியும். எனவே இதற்காக அலுவலகமத்திற்கு விடுப்பு எடுத்து வரிசையில் நின்று காத்திருந்த கட்ட வேண்டிய அவசியல் இல்லாத நிலை உருவாகிவிட்டது. 

வீடு தேடி வரப்போகுது தங்கம்.! தமிழக அரசின் சூப்பர் பிளான்!!

click me!