செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஜெயில்ல போடுங்க! சொத்துக்களையும் முடக்குங்க! சொல்வது யார் தெரியுமா?

Published : Mar 14, 2025, 09:01 AM ISTUpdated : Mar 14, 2025, 09:09 AM IST

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்.

PREV
15
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஜெயில்ல போடுங்க! சொத்துக்களையும் முடக்குங்க! சொல்வது யார் தெரியுமா?
TASMAC Raid

டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுமான ஆலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

25
Enforcement Directorate

மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முறையான KYC, ஜிஎஸ்டி மற்றும் PAN விவரங்களைக் குறிப்பிடாத விண்ணப்பதாரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுபானங்களை ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிக விலை வைத்து விற்பனை செய்ததற்கான ஆதாரங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உயிரை பறித்து கொண்டிருக்கும் மது, இப்போது ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டிருப்பது தமிழக அரசுக்கே அவமானம், தலைகுனிவு என நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். 

35
Narayanan Thirupathy

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: டாஸ்மாக் ஊழல், முறைகேடுகள் குறித்த அமலாக்கத்துறை சோதனையின்  அறிக்கை, கடந்த இரு வாரங்களாக ‘மொழி நாடகத்தை’ திமுக நடத்தி வருகிறது என்ற நம் கருத்தை, விமர்சனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. விசாரணை மேலும் தொடரும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: 17ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

45
MK Stalin

இதை எதிர்பார்த்து தான் மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுவரையறை- மாநில உரிமைகள் என கபட நாடகத்தை திமுக நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. மதுபான ஆலைகள், டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பார் நடத்துபவர்கள் என ஒட்டுமொத்த அமைப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. தமிழர்களின் உயிரை பறித்து கொண்டிருக்கும் மது, இப்போது ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டிருப்பது தமிழக அரசுக்கே அவமானம் தலைகுனிவு.

இதையும் படிங்க:  டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்: அமலாக்கத்துறை அறிக்கை

55
Senthil balaji

இந்த ஊழல் திட்டமிடப்பட்ட ஊழல். இதற்கான முழு பொறுப்பையும் தமிழக முதல்வரே ஏற்க வேண்டும். இத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு, அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை மது ஆலைகள், டாஸ்மாக் நிறுவனம், மதுக்கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories