மகளிர் உரிமை தொகை உயர்கிறது? அதுமட்டுமல்ல! தமிழக பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

Published : Mar 14, 2025, 08:04 AM IST

Magalir Urimai Thogai: 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிமைத் தொகை உயர்த்தப்படுமா அல்லது திட்டம் விரிவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

PREV
15
மகளிர் உரிமை தொகை உயர்கிறது? அதுமட்டுமல்ல! தமிழக பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?
Tamil Nadu budget

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2025 -2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

25
Kalaingar Magalir Urimai Thogai

அதாவது மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

35
Magalir Urimai Thogai Scheme

குறிப்பாக தமிழ்நாட்டை பின்பற்றி இந்தியாவில் கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மாநில அரசுகளால் வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000 மட்டும் வழங்கப்படும் நிலையில் பிற மாநிலங்களில் 1500, 2000, 2500 என்ற அளவில் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையின் தவணை உயர்த்தி வழங்க வேண்டும், இந்த திட்டத்தை விரிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. 

45
magalir urimai thogai

55
Magalir Urimai Thogai Scheme

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுக அரசு தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories