அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வரப்போகிறது.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஜாக்டோ ஜியோ

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்பாக அமைச்சர்கள் குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதல்வருடன் நடத்திய பேச்சு திருப்திகரமாக இருந்ததாகவும், பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Jacto Geo confident that government employees demands will be fulfilled in the budget meeting KAK

Tamil Nadu government employees : அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்கள் கடைநிலை வரை சென்று சேருவதற்கு அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது.  அந்த வகையில் தங்களது கோரிக்கைகளான ,  காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும்,

தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்ட சரணவிடுப்பு சலுகையினை பணியாளர்கள் பயன்பெற மீண்டும் உடனடியாக வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும்.
 

Jacto Geo confident that government employees demands will be fulfilled in the budget meeting KAK
அரசு ஊழியர்கள் கோரிக்கை

01.06.2009 முதல் பணியேற்று 7-வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு ஓராண்டுகாலம் இடைவெளியில் சுமார் ரூ.15,000/-க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைந்து உரிய ஊதியம் வழங்கிட வேண்டும், தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


அரசு ஊழியர்கள் போராட்டம்

இதனையடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் அமைச்சர்கள் குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்திட அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து ஒரு சில சங்கங்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த நிலையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

முதலமைச்சரோடு பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், முதலமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசு மீது முழு நம்பிக்கை வையுங்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கோரிக்கைகள் நிறைவேறும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேறுகிறது

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அல்லது நிதி அமைச்சர் உரையின் கீழ் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பதன் மூலம் 6அரை லட்சம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். சரண் விடுப்பு சலுகை மூலம் 12 லட்சம் பேர் பயன் அடைவார்கள். எனவே முதலமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை முழு திருப்தியாக இருந்தது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் என நம்பிக்கை இருப்பதாக கூறினர். 

இதனிடையே இன்று தாக்கல் செய்த தமிழக நிதி நிலை அறிக்கையில், அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை பரிசீலித்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 1.4.2026 முதல் சரண் செய்து பணப்பயன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் .இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

Latest Videos

click me!