மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பொன் வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் ஜூன் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களான அமைச்சருமான மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் மே 23ம் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தியுள்ளார்.
24
மேயரின் கணவர் மீது புகார்
இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன் வசந்த் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதுமட்டுமல்ல வீடு கட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதியென பல விஷயங்களில் பொன் வசந்த் மேயர் போல செயல்படுவதாக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளது. இதனையடுத்து பொன் வசந்த் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
34
திமுகவில் இருந்து நீக்கம்
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மதுரை மாநகர் மாவட்டம், 57வது வார்டைச் சேர்ந்த பொன்வசந்த் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.