Published : Feb 27, 2025, 02:49 PM ISTUpdated : Feb 27, 2025, 02:55 PM IST
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன். அதிமுகவில் இருந்த போது 3 முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு திமுகவில் இணைந்தார்.
24
Minister KKSSR Ramachandran
இதுவரை 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆறுமுறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது திமுக அமைச்சரவையில் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அவசரமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் வழக்கமாக பரிசோதனை என்று கூறப்பட்டாலும் மருத்துவமனையின் அறிக்கைக்கு பிறகு உண்மை நிலவரம் தெரியவரும். மேலும் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்ற தகவலும் வெளியாகும். அமைச்சரின் உடல் நிலை பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.