வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ என்று பேசுகிறார்கள். மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்புடன் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பணிகளைத் தொடக்கி வைத்தார்..
24
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சி..
இதனைத்தொடர்ந்து, டூவிபுரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்... தொடர்ந்து, அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 5 ஆண்டு காலமாக மழை, மும்மாரி பொழிந்து கொண்டிருக்கிறது. தமிழகமும் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. எல்லா வகையிலும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கின்றோம்.
34
திராவிட மாடல் 2.0
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை 5,41,000 பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் பச்சரிசி, சீனி, பன்னீர், கரும்பு, 3,000 வேஷ்டி சேலை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 168 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக கூட்டுறவுத் துறை மூலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நல்ல முறையில் பயனடைந்து வருகிறார்கள். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை..
சமூக நலத்துறை 4,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு சுமத்தினார்.. இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? எனக்கு என்ன கணக்கு என்று தெரியவில்லை.. எதிர்க்கட்சியின் டார்கெட் இதுதான், பாஜகவின் டார்கெட் இதுதான். தேர்தலுக்கு முன்பு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு சொல்ல வேண்டும்.. சட்டம், ஒழுங்கு, சீர்கேடு என்று சொல்லவேண்டும் அதுதான் டார்கெட்.. அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.. தமிழக மக்கள் இதனை அறிவார்கள். எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை. வெளிப்படையான ஒர் நிர்வாகம் நடந்து கொண்டு இருக்கிறது.