பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் கொடுக்க தயாரான பரிசு.! தேதி குறித்த தமிழக அரசு

Published : Nov 01, 2025, 09:34 AM IST

தமிழக அரசு இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகளையும் வழங்கவுள்ளது. இந்த தரமான வேட்டி சேலைகள் நவம்பர் 15 முதல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். 

PREV
14

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கவுள்ளது. 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகையும், தொகுப்பும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவசமாக வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்படும். இதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

24

கதர் துறை சார்பாக நவம்பர் மாதம் மத்தியில் வருவாய் துறை அதிகாரிகளிடம் வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் முக்கியமான ஒன்றான முருகன் கூட்டுறவு சங்கம், அதன் விற்பனை நிலையத்தை புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது.

 தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி,

34

கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு என்றும், தாங்கள் உத்திரவாதத்துடன் (கேரண்டி) விற்பனை செய்வதாகவும் கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. 

எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்வதாகவும் குறிப்பிட்டார்.

44

மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், 

தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ₹9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகவும், 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories