திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் துரைமுருகன்(86). தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் சிகிச்சை பெறுவதுமாக இருந்து வருகிறார்.
24
சளி தொல்லை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார். மேலும் சளி தொல்லையாலும் அவ்வப்போது பாதிக்கப்படுகிறார்.
34
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது சளி பிரச்சினை காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று தான் தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.