ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! தேதி குறித்த தமிழக அரசு!

Published : May 08, 2025, 11:39 AM ISTUpdated : May 08, 2025, 11:40 AM IST

 மகளிர் உரிமைத் தொகைக்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதால் புதிய அட்டைக்கு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. மேலும், ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

PREV
14
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! தேதி குறித்த தமிழக அரசு!
ரேஷன் கடைகள்

Tamilnadu ration card : தமிழ்நாட்டில்  34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இந்த அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.

24
மகளிர் உரிமை தொகை

மேலும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே புதிய அட்டை கேட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விரைவில் இவர்களுக்கு புதிதாக  ரேஷன் அட்டை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டையில் பெயரை சேர்க்க நீக்கம் செய்ய தமிழக அரசு சூப்பர் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

34
பெயரை சேர்க்க, நீக்க சூப்பர் சான்ஸ்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் மே 10ம் தேதியன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

44
சென்னையில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories