12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் செண்டம்! இதோ முழு விவரம்!

Published : May 08, 2025, 10:14 AM IST

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களை விட அதிகமாக உள்ளது.

PREV
13
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் செண்டம்! இதோ முழு விவரம்!
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதிய நிலையில்  7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

23
தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம்

அதாவது மாணவிகள் 4,05,472  (96.70%), மாணவர்கள் 3,47,670 (93.16%). மாணவர்களை விட மாணவிகளே (3.54%) அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.82 சதவிகிதத்துடன் அரியலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.  ஈரோடு 97.98 சதவிகித்துடன் 2வது இடத்திலும், திருப்பூர் 97.53 சதவிகித்துடன் 3வது இடத்திலும், கோவை 4வது இடத்திலும், கன்னியாகுமரி 5வது இடத்திலும் உள்ளது. 

33
100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் 135 பேர் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் யாரும் 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 26,887 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,853. 

Read more Photos on
click me!

Recommended Stories