Published : Feb 17, 2025, 12:50 PM ISTUpdated : Feb 17, 2025, 01:00 PM IST
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். . முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
துரைமுருகனுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு.! மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்த ஸ்டாலின், உதயநிதி
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் துரைமுருகன் (வயது 86) திமுக பொதுச்செயலாளரும், கனிமளவத்துறை அமைச்சராகவும் உள்ளார். கட்சி மற்றும் அரசு பணிகளில் தீவிரமாக உழைத்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் பரிசோதனை மேற்கொண்டும் வருகிறார்.
23
மருத்துவமனையில் துரைமுருகன்
இந்த நிலையில் இன்று காலை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது திடீரென துரைமுருகனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அமைச்சர் துரைமுருகன் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது லேசான உடல் சோர்வுடன், சளி தொடர்பான பிரச்சனை இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
33
துரைமுருகனுக்கு மருத்துவ பரிசோதனை
தற்போது துரைமுருகனின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் துரைமுருகன் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அங்கு மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தனர். சிகிச்சைக்கு பிறகு நாளை வீடு திருப்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.