2G வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையானதை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது
கனிமொழி, ஆ.ராசாவிற்கு மீண்டும் செக்.! 2 ஜி வழக்கில் தேதி குறித்த நீதிமன்றம்
2009- 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவும் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தது. அப்போது மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பதவி வகித்தார். அவரது பதவி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும் இதன் காரணமாக மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத்துறை தெரிவித்திருந்தது.
24
திகார் சிறையில் கனிமொழி, ராசா
இந்த பிரச்சனையால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்டம் காண வைத்தது. அந்த ஆட்சி காலத்திலேயே சிபிஐயால் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல மாதங்களுக்கு பிறகே திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி முன்னிலையில் நடைபெற்றது.
34
கனிமொழி ராசா விடுதலை
பல வருடங்கள் நடைபெற்ற சட்ட போராட்டங்களில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் கடந்த 2017-ம் ஆண்டு நீதிபதி ஓபி ஷைனி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மேலுமுறையீட்டு மனுவை விசாரிப்பதா அல்லது நிராகிரப்பதா.? என விசாரணை நடைபெற்றது.
44
மார்ச் 18 முதல் விசாரணை
7 நீதிபதிகள் விசாரணை நடத்திய நிலையில் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதனையடுத்து எப்போது விசாரணை தொடங்கும் என தேதி அறிவிக்கப்படாமல் இருந்த வந்த நிலையில் 2 ஜி வழக்கு மீதான விசாரணை மார்ச் 18-ல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தினந்தோறும் நடைபெற்று தீர்ப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாஎக தகவல் கூறப்படுகிறது.