Published : Feb 16, 2025, 07:06 PM ISTUpdated : Feb 16, 2025, 08:06 PM IST
Post Office Special Scheme: நீங்கள் ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை தபால் நிலையத்தில் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்த தொகையை மூன்று மடங்காகக்கூட உயர்த்தலாம். ரூ.5 லட்சத்தை முதலீடு செய்து ரூ.15 லட்சக்கும் அதிகமாகப் பெறுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையைத் ஏற்படுத்தித் தர நினைக்கிறார்கள். இதன் காரணமாக, குழந்தை பிறந்தவுடனேயே பெற்றோர்கள் அனைத்து வகையான நிதித் திட்டமிடல்களையும் தொடங்குகிறார்கள். சிலர் குழந்தையின் பெயரில் PPF, சுகன்யா சம்ரிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். அதே நேரத்தில் சிலர் குழந்தையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்காவது ஒரு பெரிய தொகையை முதலீடு செய்கிறார்கள்.
26
Post Office Schemes
நீங்களும் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை போஸ்ட் ஆபிஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். போஸ்ட் ஆபிசில் 5 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு வங்கிகளை விட சிறந்த வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், மூன்று மடங்குக்கு மேல் வருமானம் ஈட்டலாம். அதாவது ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ரூ.15 லட்சத்துக்கு மேல் முதிர்வுத்தொகை பெறலாம். அது எப்படி என்பதை அறிந்துகொள்ளலாம்.
36
Post Office Time Deposit Scheme
5 லட்சத்தை 15 லட்சமாக மாற்ற, நீங்கள் முதலில் ரூ.5 லட்சத்தை தபால் அலுவலக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபிஸ் 5 வருட FD க்கு 7.5 சதவீத வட்டி வழங்குகிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய வட்டி விகிதத்துடன் கணக்கிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும்.
46
Post Office Fixed Deposit Scheme
இந்தத் தொகையை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்க வேண்டும். 10 ஆண்டுகளில் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வட்டி மூலம் ரூ.5,51,175 வருமானம் சம்பாதிக்கலாம். 10 வருடம் கழித்து ரூ.10,51,175 முதிர்வுத் தொகை சேரும். அதாவது முதலீடு செய்த தொகை இரு மடங்கிற்கும் அதிகமாகும்.
56
Post Office Scheme Benefits
இப்போது FD முதலீட்டை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த 5 லட்ச ரூபாய் பணத்துக்கு வட்டியாக ரூ.10,24,149 சேரும். இத்துடன் முதலீடு செய்த ரூ.5 லட்சத்தையும் சேர்த்தது மொத்தம் ரூ. 15,24,149 கிடைக்கும்.
66
Post Office FD Interest Rate
15 லட்சம் தொகையைச் சேர்க்க, நீங்கள் தபால் அலுவலக FD-ஐ இரண்டு முறை நீட்டிக்க வேண்டும். இதற்கு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. தபால் அலுவலக 1 வருட FD-ஐ முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் நீட்டிக்க முடியும், 2 வருட FD-ஐ முதிர்வு காலத்திற்குள் 12 மாதங்களுக்குள் நீட்டிக்க வேண்டும். அதேசமயம் 3 மற்றும் 5 வருட FD-ஐ நீட்டிக்க, முதிர்வு காலத்திற்குப் பிறகு 18 மாதங்களுக்குள் அஞ்சல் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது தவிர, கணக்கைத் திறக்கும் நேரத்தில் முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிக்கக் கோரலாம். முதிர்வு நாளில் அந்தந்த TD கணக்கில் பொருந்தும் வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்குப் பொருந்தும்.