பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்! ரூ.48,000 உதவித்தொகை! அள்ளிக்கும் கொடுக்கும் மத்திய அரசு!

Published : Feb 16, 2025, 03:40 PM IST

 தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

PREV
14
பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்! ரூ.48,000 உதவித்தொகை! அள்ளிக்கும் கொடுக்கும் மத்திய அரசு!
பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்! ரூ.48,000 உதவித்தொகை! அள்ளிக்கும் கொடுக்கும் மத்திய அரசு!

பள்ளி மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கவும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) மத்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. 

24
School Student

 

இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

34
school teacher

அதன்படி இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.  மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் ஜனவரி 29ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள் மற்றும் ஹால் டிக்கெட்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) நாளை வெளியிடப்பட உள்ளது. 

44
school student

இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். இதுதவிர மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories