Published : Feb 16, 2025, 06:22 PM ISTUpdated : Feb 16, 2025, 06:42 PM IST
Ration card e-KYC deadline: பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் வரும் சனிக்கிழமைக்குள் e-KYC செய்ய வேண்டும். e-KYC செய்யத் தவறினால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். செல்போன் OTP அல்லது ஆதார் பயோமெட்ரிக் மூலம் e-KYC செய்யலாம்.
மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை (PDS) நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் மிகவும் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது.
25
What is Ration card e-KYC?
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பலன் பெறுபவர்கள் சில அரசின் சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தவறினால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க மத்திய அரசு e-KYC (Electronic Know Your Customer) முறையைக் கட்டாயமாக்கி உள்ளது.
35
Tamil Nadu Ration card holders
பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் சரியான மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்ய இந்த e-KYC செயல்முறை தேவைப்படுகிறது. e-KYC மூலம் ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் ஆதார் தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகிறது.
45
Public Distribution Scheme (PDS)
e-KYC சரிபார்ப்புக்கு இரண்டு வழிகள் உள்ளன. செல்போனில் OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசியக் குறியீடு மூலம் அதனைச் செய்யலாம். அல்லது கைரேகை பதிவு போன்ற ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலமாகவும் செய்யலாம். வரும் சனிக்கிழமைக்குள் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களும் e-KYC ஐ முடிக்க வேண்டும்.
55
Ration card e-KYC last date
ரேஷன் கார்டில் e-KYC ஐ முடிக்கத் தவறினால், ரேஷன் கார்டுகள் செல்லாமல் போகும் ஆபத்து உள்ளது. அதாவது e-KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்யாத ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுவிடும். பிறகு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ரேஷன் கடையில் இருந்து பெற முடியாது. இதைத் தவிர்க்க உடனடியாக, வரும் சனிக்கிழமைக்குள் ரேஷன் கடைக்கு நேரில் சென்று e-KYC செயல்முறையை முடித்துவிடுங்கள்.