பெரியாரை விமர்சித்ததால் சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீமான் கைதா.? வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்- காரணம் என்ன.?
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தேர்தல் களத்தில் கலக்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி, சீமானின் ஆவேசமான பேச்சுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் ரசிகர்கள் உண்டு. தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமானுக்கு பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆதரவாக உள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சதவிகித வாக்குகளை சீமான் பெற்று வருகிறார்.
25
பெரியாரை திடீரென விமர்சித்த சீமான்
இந்த நிலையில் தான் கடந்த பல வருடங்களாக பெரியாரை ஆதரித்து புகழந்து பேசிய சீமான் திடீரென பெரியாரை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் சீமான் வீட்டை பெரியார் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சீமான் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கும் பதியபட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு காவல்நிலையத்தில் ஆஜர் ஆக சீமானுக்கு போலீசாரால் சம்மன் வழங்கப்பட்டு வருகிறது.
35
சீமான் வீட்டில் குவிந்த போலீசார்
அந்த வகையில் இன்று காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீடு முன்று திடீரென போலீசார் குவிந்தனர். எனவே சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என்று சீமான் சீமான் பேசியிருந்தார்.
45
மன சோர்வை ஏற்படுத்த திட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வரும் 20 ம் தேதி ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சீமானுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எல்லா இடங்களிலும் வழக்கு போட்டு அலையவைத்து மன சோர்வை ஏற்படுத்த அரசு நினைக்கிறது. இதெற்கெல்லாம் சோர்வையடும் ஆளா நான். நிறைய பார்த்தாச்சு. இதற்கெல்லாம் அச்சப்படுபவர் அரசியலுக்கு வர முடியாது. எத்தனை வழக்கு வேண்டும் என்றாலும் போடுங்கள்.
55
வழக்கை எதிர்கொள்ள தயார்
நான் எதிர்கொள்ளுவேன். ஒரே காரணத்திற்காக போடப்பட்ட வழக்கு ஒரே வழக்காக போட சொல்லி நீதிமன்றம் செல்வேன். இதற்கிடையே சம்மன் கொடுக்கப்படுகிறது. நாளை ஒரு வழக்கு விசாரணைக்கு விக்கிரவாண்டி அடுத்ததாக சேலம் செல்ல வேண்டியுள்ளது. ஒரே ஆளு தான் இருக்கேன். ஏஐ உருவாக்கி எல்லா இடத்திற்கும் அனுப்ப முடியாது.
ஒன்று ஒன்றாகத்தான் செய்யனும். திமுக அரசுக்கு என்னால் தான் நெருக்கடி. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதிகாரத்தில் இருக்கிறவங்க, நிலையானது என நினைப்பது தான் சிரிப்பாக உள்ளது. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன் என கூறினார்.