அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி: அமைச்சர் அன்பில் மககேஸ் கொடுத்த அப்டேட்
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, “இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கெண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க ஆவன செய்ய வேண்டும். ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் வாங்க முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் எங்கள் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் கடந்த செப்டம்பர் மாத ஊதியம் மத்திய அரசின் பங்களிப்பு தாமதமான போதும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் 12,000 பகுதிநேர பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 32,500 பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கி உதவியதைப் போன்று இதையும் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். மேலும் பண்டிகை முன்பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க ஆணையிட வேண்டும்.
முன்பணம் கடனாக வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டுகிறோம். 13 ஆண்டுகளாக தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட, திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ அரசாணையாக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது. பணி நிரந்தரம் தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்து உள்ளார்.