Diwali Festivel
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இடையில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.
Government Employee
எனவே கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசு தீபாவளிக்கு முந்தைய நாள் அல்லது அடுத்த நாள் அரசு பொது விடுமுறையாக அறிவித்து வருகிறது. எனவே நவம்பர் 1ம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
Tamilnadu Government
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்த ஆண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 09ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Four days Holiday
நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.