Diwali Special Train
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் தங்கி பணிபுரியும் நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சிப்பர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், கேரளா, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில் காத்திருப்போர் பட்டியல் சுமார் 7000ஐ கடந்து செல்கிறது.
Special Train
இதுபோன்ற முக்கியமான தருணங்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே வாரியம் முயற்சி செய்யும். அந்த வகையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி வருகின்ற 29, நவம்பவர் 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், அக்.29, நவ.2 தேதிகளில் கோவைக்கும், அக்.30, நவ.6 தேதிகளில் திருநெல்வேிலக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போன்று அக்.30, நவ.2 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கும், நவ.2ம் தேதி சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கொச்சுவேலி - மைசூரு இடையே நவ.4ம் தேதியும், நவ.2ம் தேதி நாகர்கோவில் - மைசூரு இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Ayodhya special train
மேலும் சென்னை, எர்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவம்பர் 15ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.