மினி பேருந்து கட்டணம் உயர்வு! எவ்வளவு உயர்ந்தது? எப்போது முதல்!

Published : Jan 28, 2025, 05:03 PM ISTUpdated : Jan 28, 2025, 05:12 PM IST

சென்னையில் MTC பேருந்துகளுடன் இயங்கும் மினி பேருந்துகளின் கட்டணம் மே 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. 4 கி.மீ முதல் 20 கி.மீ வரை உள்ள தூரங்களுக்கு ஏற்ப கட்டணம் ரூ.4 முதல் ரூ.10 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

PREV
14
மினி பேருந்து கட்டணம் உயர்வு! எவ்வளவு உயர்ந்தது? எப்போது முதல்!
மினி பேருந்து கட்டணம் உயர்வு! எவ்வளவு உயர்ந்தது? எப்போது முதல்!

தலைநகர் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநகரப் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த ஏரியாவில் பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!

24

மேலும் ரயில் நிலையங்களை பேருந்து நிலையங்களோடு இணைக்கும் வகையில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

34

இந்நிலையில் மினி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதாவது மினி பேருந்துகளில் முதல் 4 கி.மீ வரை 4 ரூபாய் கட்டணமும், 4 முதல் 6 கி.மீ வரை 5 ரூபாய் கட்டணமும், 6 முதல் 8 கி.மீ வரை 6 ரூபாய் கட்டணமும், 8 முதல் 10 கி.மீ வரை 7 ரூபாயும், 10 முதல் 12 கி.மீ வரை 8 ரூபாயும், 12 முதல் 14 கி.மீ வரை 9 ரூபாயும், 14 முதல் 16 கி.மீ வரை 9 ரூபாயும், 16 முதல் 18 கி.மீ வரை 9 ரூபாயும், 18 முதல் 20 கி.மீ வரை 10 ரூபாயும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு மே 1ம் தேதி அமலுக்கு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை முடிந்தாலும்! இந்த மாவட்டங்களில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!

44

தலைநகர் சென்னையிலும் தனியார் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் பயணியர் மற்றும் மினி  பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்த சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் முதல் முறையாக தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முருகன் பக்தர்களுக்கு அடுத்தடுத்து சூப்பர் நியூஸ்! ஆசியாவிலேயே பெரிய 160 அடி சிலை! பழனியில் இந்த கட்டணம் ரத்து

Read more Photos on
click me!

Recommended Stories