வடகிழக்கு பருவமழை முடிந்தாலும்! இந்த மாவட்டங்களில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!

Published : Jan 28, 2025, 03:22 PM ISTUpdated : Jan 28, 2025, 03:39 PM IST

வடகிழக்கு பருவமழை விலகிய போதிலும், தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PREV
16
வடகிழக்கு பருவமழை முடிந்தாலும்! இந்த மாவட்டங்களில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!
வடகிழக்கு பருவமழை முடிந்தாலும்! இந்த மாவட்டங்களில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே அதாவது அக்டோபர் மாதம் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த முறை வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து நேற்றுடன் விலகியதாக சென்னை வானிலை ஆய்வு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்படி இருந்த போதிலும் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

26
Tamilnadu Weather Update

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயில் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அலறிய பக்தர்கள்!

36
Tamilnadu Rain


அதேபோல் 30ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 30ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

46
Heavy rain

வரும் 31ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: முருகன் பக்தர்களுக்கு அடுத்தடுத்து சூப்பர் நியூஸ்! ஆசியாவிலேயே பெரிய 160 அடி சிலை! பழனியில் இந்த கட்டணம் ரத்து

56
Rain News

பிப்ரவரி 1ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

66
Chennai Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories