தமிழக பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை தொடர்வாரா அல்லது புதிய தலைவரா என்பது குறித்து கட்சிக்குள் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் பாஜக அனைத்து மாநிலங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் தென் மாநிலங்களை குறிவைத்த பாஜக முதல் கட்டமாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து ஆந்திரா, தெலங்கானா என மெல்ல மெல்ல வளர்ந்து வரும் பாஜக அடுத்த இலக்காக தமிழகம் மற்றும் கேரளாவை குறி வைத்துள்ளது. இதற்காக தமிழக பாஜகவில் அதிரடியாக அரசியல் செய்ய தலைவர்கள் நியமித்தது.
25
தமிழகத்தை குறி வைக்கும் பாஜக
அதற்கு ஏற்றார் போல தமிழிசை, எல்.முருகன் ஆகியோரை நியமித்த பாஜக தலைமை அடுத்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை களம் இறக்கியது. அண்ணாமலையும் தனது அதிரடி அரசியலால் ஆளுங்கட்சியான திமுகவிற்கு கடும் போட்டியாக இருந்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் கிராமங்களிலும் பாஜகவின் கொடி பறக்க தொடங்கியது. அந்த அளவிற்கு பாஜகவின் வளர்ச்சியில் அண்ணாமலையின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இளைஞர்கள் ஏராளமானோர் அண்ணாமலையை தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது பின்னால் வர தொடங்கியுள்ளனர்.
35
அண்ணாமலையின் தமிழக அரசியல்
அதே நேரம் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுக- பாஜக கூட்டணி முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது மட்டுமில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியே கிடைத்தது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் கள ஆய்வை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாஜகவும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து வருகிறது.
45
புதிய பாஜக தலைவர்கள் யார்.?
அடுத்ததாக மாநில தலைவரையும் அறிவிக்கவுள்ளது. பாஜகவை பொறுத்தவரை இரண்டு முறை மட்டுமே தலைவர் பொறுப்பில் இருக்க முடியும். அந்த வகையில் அண்ணாமலையின் முதல் கட்ட பதவி காலம் முடிவடையவுள்ளது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவார்களா.? அல்லது அண்ணாமலையே மீண்டும் மாநில தலைவராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் பதவி இடங்களுக்கு கடும் போட்டியானது நிலவி வருகிறது. அதன் படி தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பேராசிரியர் சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
55
யாருக்கு வாய்ப்பு.?
இதில் யாரை மாநில தலைவராக நியமிக்கலாம் என தேசிய மேலிடம் ஆலோசித்து வருகிறது. எந்த நேரத்திலும் புதிய தமிழக பாஜக தலைவர் பெயர் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றும் பட்சத்தில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் அந்த வகையில் தலைமையின் அறிவிப்பிற்காக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் காத்துள்ளனர்.