Mayiladuthurai Vairamuthu murder Case: மயிலாடுதுறை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினரால் வைரமுத்து சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். பதிவுத் திருமணம் செய்யவிருந்த நிலையில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகியும் டூ வீலர் மெக்கானிக் கடையில் வைரமுத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் விஜயா தம்பதியின் மகள் மாலினி(26). கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் ஷாப்பிங் மாலில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். ஆனால் மாலினியின் தாய் விஜயா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு பெண் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
25
மிரட்டிய மாலியின் தாய்
இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பவே உன்னை தட்டியிருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் உறுதியாக இருந்தார். இதனையடுத்து எங்களுக்கும் மாலினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல் நிலையத்தில் எழுதி கொடுத்தனர்.
35
வைரமுத்து கொலை
பின்னர் மாலினி வைரமுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். வைரமுத்துவும் மாலினியும் பதிவு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக மாலினி பதிவு திருமணத்திற்கான சான்றிதழ்களை எடுப்பதற்காக சென்னையில் தங்கி இருக்கும் அறைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வைரமுத்து இரவு வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வழிமறித்த மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். உயிருக்கு போராடிய வைரமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்கள் மகனை காதலியின் குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாலினியின் சகோதரர்கள் குணால், குகன், சித்தப்பா பாஸ்கர் மற்றும் சுபாஷ், கவியரசன், அன்பு நிதி உள்ளிட்டோர் மீது வைரமுத்தின் குடும்பத்தின் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சுபாஷ் கவியரசன் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மாலினி சகோதரர்கள் குணால், குகன், சித்தப்பா பாஸ்கர் உள்ளிட்டவரை போலீசார் வருகின்றனர்.
55
கதறும் மாலினி
காதல் கணவனோடு இனி மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என்கிற ஆசையில் சென்னையில் இருந்து ஊர் திரும்பிய காதலி மாலினி தனது குடும்பத்தினராலேயே தனது காதல் வைரமுத்து படுகொலை செய்யப்பட்டது அறிந்து அழுது கதறினார். மருத்துவமனை வாசலில் மாலினி முத்து.. இதுதான் நம் ஊர்கோலமடா? ஒரே பார்க்குதுடா.. நான் கத்துறது உன் காதுல விழவில்லையா? நாம தோத்துட்டுமா? நம்ம தோத்துட்டோம் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீர் வர வழைத்தது.