பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக.வில் இருந்து டெல்லி செல்லும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ், செங்கோட்டையன் என அடுத்தடுத்து பலரும் டெல்லி நோக்கி படை யெடுத்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில் அண்மையில் அணிகள் இணைப்பு என்ற கோரிக்கையை முன்னிருத்தி செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து தனது கோரிக்கையை முன்வைத்ததாக அவரே வெளிப்படையாக தெரிவித்தார்.
23
அமிஷா உடன் சந்திப்பு
அவரைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லியில் முகாம் இட்டுள்ளார். குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, இந்த பணியை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.
33
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை
உள்துறை அமைச்சா அமித்ஷாவின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக அரசியலில் பல தகவல்கள் பறிமாறப்பட்டன. இந்நிலையில், சந்திப்பு தொடர்பாக பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.